http://www.mediafire.com/?p47xbpk999iot1o
இந்த முகவரியை காப்பி செய்து, உங்கள் இணையத்தில் போட்டு தேடுங்கள்.
மீடியாபயர் இணையதளத்தில், இந்த லிங்கஃ கிடைத்து, அனைத்துப் பாடல்களையும் ஒரே பைலில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
http://www.mediafire.com/file/p47xbpk999iot1o/Yarukku%20Yaro%20-%20All%20Songs.mp3
Saturday, August 6, 2011
யாருக்கு யாரோ MP3 பாடல்கள்
அண்மையில் 'யாருக்கு யாரோ' (ஸ்டெப்னி) என்ற திரைப்படம், வெளிவந்து, நம் நெஞ்சங்களில் சக்கை போடு போட்டது. அப்படத்தில் நடித்த நடிகர் பெருந்திலகம் 'சாம் ஆன்டர்சனின் நடிப்பை மிஞ்ச இன்னொருவன் பிறந்துதான் வர வேண்டும். சாமின் நடனமும், அசைவுகளும் இணைய பட்டி தொட்டியெங்கும் பிரபலம். யூடியூப்பில் முன்னணி இடம் நம் சாமுக்குத்தான். இப்படிப்பட்ட பெருமை கொண்ட நம் அண்ணாத்தேயின் 'யாருக்கு யாரோ' என்ற மகா காவியத்தின் பாடல்களை எம்பி3 வடிவமாக இத்துடன் இணைத்துள்ளேன். இதனைப் பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்.
வாழ்க நடிகர் பெருந்திலகம் சாம் ஆன்டர்சன்
ஒழிக, அன்னாரை கேலி செய்யும் திம்மிகள்.
வாழ்க நடிகர் பெருந்திலகம் சாம் ஆன்டர்சன்
ஒழிக, அன்னாரை கேலி செய்யும் திம்மிகள்.
Wednesday, January 6, 2010
Monday, June 1, 2009
நல்ல கனவா, கெட்ட கனவா?
பல நாட்களாக இந்தக் கனவு அடிக்கடி எனக்கு வந்து கொண்டிருக்கிறது. இரவில் தூங்கினால் இந்தக் கனவுதான் உருவமெடுக்கிறது.
நண்பர்களிடம் சொன்னால், சிலர் பயங்கரக் கனவு என வாதிடுகின்றனர். பலர் நல்ல கனவு என்கின்றனர்.
இன்னும் சிலர் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகலாம் என்கின்றனர்.
நான் குழம்பிப் போய் இருக்கிறேன். உண்மையிலேயே இது நல்ல கனவா? கெட்ட கனவா? யார் எனக்கு விடை தருவார்கள்.
இப்போது கனவைச் சொல்கிறேன்.
மேலேயுள்ள நிலப்படத்தைப் பாருங்கள்.
இந்தப் படம்தான் அடிக்கடி என் கனவில் வருகிறது.
இப்போது நீங்கள் சொல்லுங்கள்.
இது நல்ல கனவா? கெட்ட கனவா?

Monday, May 11, 2009
தமிழர்களே - ஜீ தமிழ் (Zee Tamil) சேனல் மட்டும் பாருங்கள்
தமிழர்களே - ஜீ தமிழ் சேனல் மட்டும் பாருங்கள்
நண்பர்களே, இப்போது நான் பிற டிவிகளை பார்ப்பதில்லை. ஜீ தமிழ் டிவி மட்டுமே பார்க்கிறேன். இது மட்டும்தான் நடுநிலைச் செய்திகளை, உண்மையான அனுதாபத்துடன் வெளியிடுகிறது. இங்கு செய்தி வாசிக்கும் தோழர்களின் குரலில் உண்மையான அனுதாபம் வெளிப்படுகறது. ஜீ டிவியின் காலை 8.00 மணி செய்திகளை நான் ஒருநாளும் தவறவிட்டதில்லை
முக்கியமாக இலங்கையில் நடைபெறும் சம்பவங்களில்
"250 அப்பாவித் தமிழர்கள் கொலை"
"இலங்கை ராணுவத்தின் கோர வெறியாட்டம்"
என்று துணிச்சலாக அனுதாபத்துடன் செய்தி வாசிக்கிறார்கள்.
மேலும் இலங்கை பிரச்சினைக்குக் காரணமான அரசியல்வாதிகளைப் பிடித்து, காலை 7.30 மணி அரசியல் மேடையில் நேரடியாகத் தாக்கி விளாசுகிறார்கள். இந்த துணிச்சல் எந்த தமிழர்கள் நடத்தும் சேனல்களுக்கும் இல்லை.
வட இந்தியர்களால் நடத்தப்படும் சேனலாக இருந்தாலும், ஜீ தமிழ் சேனல், நடுநிலையோடு, விரிந்த பார்வையோடு செய்திகளைத் தருகிறது.

Saturday, October 18, 2008
பிரதமருக்கு பகீர் கடிதம்
மன்மோகன் சிங் அவர்களே, உங்களுக்கு தமிழர்களின் மீது என்ன கோபம்?ஈழத் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்து வருகிறது. அதற்கு உங்கள் சார்பாக இராணுவ உதவி செய்யப்படுகிறது.வறுமையால் இலட்சக்கணக்கான இந்தியர்கள் ஒருநாளைக்கு இறந்து போகின்றனர். ஆனால் நீங்கள், இலங்கை போர்க் கருவிகள் வாங்க, 100 கோடி டாலர் பணம் உதவி செய்துள்ளீர்கள். இந்தியாவில் என்ன செல்வ வளம் கொட்டியா கிடக்கிறது.உங்களிடம் பணம் பெற்ற இலங்கை, பாகிஸ்தானிடமிருந்து, ஆயுதங்களை வாங்கி, இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்கிறது.போதாதற்கு, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் அப்பாவி தமிழ் மீனவர்களையும் காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்கிறது.மாண்புமிகு மன்மோகன் சிங். உங்களுக்கு இரக்கமே இல்லையா? உங்கள் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், நம் மீனவர்களைக் கொன்று குவித்ததற்கு, இதற்குள் இலங்கையிடம் போர் புரிந்து, இலங்கையின் கொட்டத்தை அடக்கியிருப்பார்கள்.இந்தியாவுக்குப் பதிலாக வேறு நாடாக இருந்தால், சிங்களன் என்ற இனமே இல்லாமல் பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கும். இந்த இலட்சணத்தில், இந்தியா வல்லரசாகிவிடும் என திரும்பத் திரும்ப பொய் சொல்லி வருகிறீர்கள். பள்ளி மாணவர்களை ஏமாற்றி வருகிறீர்கள்.நீங்கள் முதலில் இலங்கைக்கு இராணுவ உதவியை நிறுத்துங்கள். தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதற்கு கடுமையான நடவடிக்கையாக, இலங்கையின் மீது போர் செய்யப்படும் என துணிச்சலாக அறிவியுங்கள்.இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் உங்களுக்குத் துணைநிற்பான். வெறும் அறிக்கை சோறு போடாது. போர் நடவடிக்கையில் இறங்குங்கள்.இல்லையெனில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த பின்பு, அடுத்ததாக தமிழ்நாட்டைத்தான் சிங்கள அரசு குறிவைத்து தாக்கும். எச்சரிக்கை.மாண்புமிகு பிரதமர் அவர்களே, உடனே நடவடிக்கை எடுங்கள்!!!
Tuesday, October 14, 2008
இந்தியா வல்லரசு ஆகவே ஆகாது
இந்தியா வல்லரசாகி விடும்.
இந்தக் கனவு எல்லோருக்கும் உண்டு.
ஆனால் நான் நம்பத் தயாராக தயாரில்லை. கண்ணை மூடிக் கொண்டு, நம்மில் பலரும் கிளிப்பிள்ளை போல் இதனையே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இது சாத்தியமாகுமா?
இல்லை, இல்லை, இல்லை.
ஒரு வல்லரசுக்கு இருக்க வேண்டிய இலக்கணம் எதுவும் இந்திய அரசுக்கும் இல்லை; இந்திய அரசியல் வாதிக்கும் இல்லை.
பின்வரும் மூன்று செயல்களை இந்தியா நிறைவேற்ற முடிந்தால், இந்தியா வல்லரசு ஆகும் சாத்தியத்தை யோசிக்கலாம்.
அ. சைனாவின் கைவசம் இருக்கும் சில இந்தியப் பகுதிகளை மீட்க முடியுமா?
ஆ. பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ள காஷ்மீரின் சில பகுதிகளை மீட்க முடியுமா?
இ. நம் தமிழர்களை சிங்கள அரசு கொடுமைப் படுத்துவதை, தடுக்க முடியுமா?
ஈ. இந்திய மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக் கொல்வதை, இந்திய அரசால் தடுக்க முடியுமா?
இத்தனையையும் இந்திய அரசால் நிறைவேற்ற முடிந்தால், இந்தியா வல்லரசு ஆகப் போவதைப் பற்றி கனவு காணலாம்.
அதுவரை, பேசாமல் போர்த்திவிட்டு, தூங்குங்கள்!

Subscribe to:
Posts (Atom)